ஆண்டிப்பட்டியில் ரூ.20 லட்சத்தில் உணவருந்தும் கூடம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா
1 min read
Ground-breaking ceremony for Rs 20 lakh dining hall at Antipatti
9.9.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஆண்டிப்பட்டியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் உணவருந்தும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மயில்ராணி பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருள்செல்வி, வார்டு உறுப்பினர் கோகிலா முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கம் சேர்மதுரை மற்றும் ராமசாமி, முருகன், நடராஜன், காளிமுத்து. முனியராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.