June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் -எச்.ராஜா பங்கேற்பு

1 min read

Procession of Ganesha idols at Red Fort – Public meeting – H. Raja participates

9/9/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் இருந்து சுமார் 38 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது
இந்த ஊர்வலத்தை பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். செங்கோட்டை வண்டி மலச்சி அம்மன் கோவில் முன்புள்ள திடலில் மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் கே சி ரோடு, வம்பளந்தான்முக்கு, வல்லம் ரோடு, செல்வவிநாயகர் கோவில் தெரு, எஸ் ஆர் கே தெரு, வழியாக சென்று தாலுகா அலுவலகம் ரோடு, மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெரு, பம்ப் ஹவுஸ் ரோடு, சேர்வைக்காரன்புதுத்தெரு, காசுக் கடைபஜார், கீழ பஜார் வழியாக சென்று சிலைகள் அனைத்தும் குண்டாற்றில் நிஜர்சனம் செய்யப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வீர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் முன்னிலை வைத்தார். அதனைத்தொடர்ந்து ஐந்தருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சுவாமி நிர்மாலானந்தா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர் சரவணன் கார்த்திக் பாஜக ஸ்டார்ட் மாநில தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா சிறப்புரை ஆற்றினார். முடிவில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி பொருளாளர் முருகேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *