June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 484 மனுக்கள் பெறப்பட்டன

1 min read

484 petitions were received in Tenkasi People’s Grievance Redressal Day meeting

10.9.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 484 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் வருவாய் கோட்டாட்சியர்கள் தென்காசி லாவண்யா, சங்கரன்கோவில் கவிதா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் செல்வக்குமார், ராமச்சந்திரன், துணை ஆட்சியர் ஷேக் அயூப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *