தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை – கலெக்டர் வழங்கினார்
1 min read
Tenkasi District Girl Child Protection Scheme Maturity Amount – Issued by Collector
10.9.2024
தென்காசி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் 14 பயனாளிகளுக்கு 6.09.398 நிலையான வைப்புத் தொகையான ரூபாய் 6 ,09,398 மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.
தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கு நிலையான வைப்புத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கமல்கிஷோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ25,000/-வீதம் நிலையான வைப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பெற்றோரில் யாரேனும் ஒருவர் 40வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் 1 அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000ற்குள் இருத்தல் வேண்டும். பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியாகும் முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தவைப்புத் தொகையானது பயன்பெறும் பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகையாக பெற்று வழங்கப்பட்டுவருகிறது. 18 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகை பெறுவதற்கு சமர்ப்பிக்கவேண்டிய சான்றுகளான -வைப்புத்தொகை இரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும். தென்காசி மாவட்டத்தில் 2024-2024 ஆம் நிதியாண்டில் 1245 பெண் குழந்தைகள் ரூ.3,11,25,000/-முதிர்வுத்தொகை பெற்று பயன்பெற்றுள்ளார்கள். தற்போது இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட முதிர்வுத் தொகைக்கான ரூ.6,09,398/- மதிப்பிலான வரைவோலைகளை 14 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் இருப்பின் சமூகநலத்துறையை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாற மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.மதிவதனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள். பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.