கனடாவில் இந்திய மாணவர் ஏரியில் மூழ்கி பலி
1 min readIndian student drowns in lake in Canada
17.9.2024
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். இவர் கனடா நாட்டில் தங்கி சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார். பிரணீத், அவரது அண்ணன் உள்ளிட்ட அனைவரும் ஏரியில் குதித்தனர். ஆனால் பிரணீத்தை தவிர மற்ற அனைவரும் கரை வந்து சேர்ந்தனர். பிரணீத்தை மட்டும் காணவில்லை.
இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து பிரணீத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.