June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

1 min read

Extension of time for demarcation of unauthorized plots in Tenkasi

16.10.2024
தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தென்காசி நகராட்சிப் பகுதியில் கடந்த 20.10.2016 அன்று அல்லது முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமை யும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்த அரசானை எண்.66, வீட் டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்: 30.03.2020-ல் அனுமதி வழங்கப்பட்டது.

எண்.132, வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 18.07.2024ல் உத்தரவிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண் ணப்பிக்கவிரும்புபவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பம் பதிவு செய்த பின் கனிமவளத் துறை, வனத்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சி யர் ஆகிய மூன்று துறை களின் தடையின்மை சான்று பெற்று உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், தென்காசி. அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து அனுமதி பெற்றபின் தென்காசி நகராட்சி அலுவலகத் தில் உரிய கட்டணங்கள் செலுத்தி மனைகளை வரன்முறை படுத்தி உத்தரவு பெற்றுக்கொள்ளலாம்.
எனவே இதுவரை தென்காசி நகராட்சி பகு தியில் வரன்முறை செய் யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவ தால் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் மனைகள் வைத்துள்ள பொதுமக் கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *