June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை- இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

1 min read

Hamas leader Yahya Shinwar killed – Shocking video released by Israel

18.10.2024
காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். நீண்ட கால தேடலுக்கு பிறகு தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
“காசாவில் நடைபெறும் போரின் இறுதி இதுவல்ல என்ற போதிலும், முடிவுக்கான ஆரம்ப புள்ளி இதுதான். சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல்,” என்று பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட அவரின் கடைசி நொடிகள் குறித்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ காண்பிக்கும் யாஹ்யா சின்வாரின் கடைசி நொடிகள் டிரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *