பொட்டல்புதூர் கந்தூரி விழா நிர்வாக கமிட்டிக்கு எஸ்.பி வாழ்த்து
1 min read
SB Congratulations to Pottelputur Ganduri Festival Management Committee
18.10.2024
தென்காசி மாவட்டம்,பொட்டல்புதூர் கந்தூரி விழாவினை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக கமிட்டியினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனவாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பள்ளிவாசலில் கடந்த 04.10.2024 முதல் 17.10.2024 வரை 14 நாட்கள் நடந்து முடிந்த கந்தூரி விழாவினை எந்த ஒரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடிக்க காவல்துறையினருக்கு உறுதுணையாக இருந்த பொட்டல்புதூர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து, தொடர்ந்து காவல் துறையினருக்கு தங்களின் ஒத்துழைப்பை மற்றும் ஆதரவினை தரும்படி கேட்டுகொண்டார்.
மேலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும் மக்களின் காவலன் திட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தங்களின் விழாவினை சிறப்பாக பாதுகாப்பு வழங்கி உறுதுணையாக இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினருக்கு நிர்வாக கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.