June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட புகைப்பட தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

1 min read

Tenkasi District Photo Workers Union General Committee Meeting

18.10.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு புகைப்பட தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் புகைப்பட தொழிலாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிபரப்பு தொழிலாளர் நலச் சங்க தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். தெய்வநாயகம் ஸ்டீபன் பெட்ரிக் சாலமன் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரவிக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக கீழப்பாவூர் ராஜன், செயலாளராக ஜோதி வேல்முருகன், பொருளாளராக முருகன், அமைப்பாளராக மாடசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் அதிகாரி சின்னத்துரை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளை போட்டோ மற்றும் வீடியோ கலையின் மூலமாக என்றும் அழியாத காவியமாக மாற்றி தருகின்ற புகைப்படக் கலைஞர்களை நம் தமிழ் சமூகம் என்றும் நன்றியோடு இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு முறையான அங்கீகாரத்தை வழங்கி நிரந்தரமான ஒரு பாதுகாப்பு அதற்காக தொழிலாளர் நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ் நாடு புகைப்படக் கலைஞர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் தேர்தல் காலங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு அந்தந்த மாவட்ட சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அரசு முறையான அனுமதி அளித்து எங்கள் சங்கத்திற்கு உரிய அங்கீகாரத்தை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் திருநெல்வேலி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரபாகரன், மாநில செயலாளர் மதுரை பாஸ்கர், பொருளாளர் மயிலாடுதுறை மாநில அமைப்பாளர் சேலம் பாலு, இணைச் செயலாளர் தேனி குருநாதன், திருநெல்வேலி சங்கர திருநாவுக்கரசு, போட்டோ ஸ்டோர் சரவணன், குருவன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் அப்பல்லோ கலர் லேப் கமால், ராஜேந்திரன், சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பாவூர்சத்திரம் அன்புமணி ஸ்டூடியோ உரிமையாளர் வேதாள ஐயங்கன் அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *