June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள்

1 min read

Guard Valoration Day in Tenkasi District

22.10.2024
இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆய்குடி காவல் நிலையத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏக கமல்கிஷோர், வல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன், மற்றும் நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்ட நீதிபதி ரத்தினவேல் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன்,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர்,
ஜெயச்சந்திரன், செங்கோட்டை நீதிபதி.சுனில் ராஜா , தென்காசி நீதிபதி ஸபொன் பாண்டி, தென்காசி மாவட்ட அரசு வழக்கறிஞர் மருதப்பன், அரசு வழக்கறிஞர் சு‌.வேலுச்சாமி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், சந்தன பாண்டியன்*, துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்படை காவலர்களின் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க பணியின் போது தனது இன்னுயிர் நீத்த தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுவாமிநாதன், ஆழ்வார்குறிச்சியில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த வெற்றிவேல், சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்த சுந்தரையா, தென்காசி ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த பசுபதி மாரி உட்பட மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறையில் பணியின் போது இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *