“டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் பயன்படுத்தும் திட்டம் இல்லை”
1 min read“No plans to use any currency as a replacement for the dollar for international trade” – Reserve Bank
7.12.2024
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பு என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டாலர் பயன்பாட்டை குறைக்க, பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் முனைப்பில், உறுப்பு நாடுகளில் ஒன்று இத்திட்டத்தினை முன்வைத்தது. ஆனால் இது அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை என்று சக்திகாந்ததாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கூறிய அவர், “டாலரை நம்பியிருப்பதை குறைக்க முற்படுவதால், எல்லை தாண்டிய கொடுப்பனவுகளில் ரூபாயைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் இருப்பை உயர்த்துவதற்கும், கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்தில், சீனாவுக்கு உற்பத்தி மாற்றாக நாட்டை நிலைநிறுத்துவதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.