ஒட்டன்சத்திரம்; பாஜக நிர்வாகி உறவினர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
1 min read
Ottanchatra; Income Tax officials conduct surprise raid at BJP executive’s relative’s house
17.12.2024
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குழந்தைவேல்
மற்றும் முருகன் ஆகிய சகோதரர்களுக்கு சொந்தமாக இயங்கி வரும் தனபாக்கியம் நகைக்கடை, வஞ்சியம்மன் பெட்ரோல் பங்க், மற்றும் அவர்களின்
வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்,
அதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் என்பவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் மேலும் வருமான வரி சோதனைக்கு ஆளாகியுள்ள செந்தில்குமார்
பாஜக நிர்வாகியின் உறவினர் என்பதும் செங்கல் சூளை மற்றும்
பல்வேறு நிதி நிறுவனங்களை செந்தில்குமார் நடத்தி வருகிறார் என்பதும்
குறிப்பிடத்தக்கது,