குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது ; நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
1 min read
A low pressure area has formed; very heavy rains are likely in Tamil Nadu tomorrow
19/12/2024
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச.,16) குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று (டிச.,16) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும். அது, அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச., 17 மற்றும் 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.