வங்கக்கடலில் ‘முரசு’ புயல் உருவானது – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min read
Cyclone ‘Murasu’ has formed in the Bay of Bengal – India Meteorological Department announces
1/11/2026
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘முரசு’ புயல் தொடர்ந்து நகர்ந்து ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கம் குறித்த தொடர் கண்காணிப்புப் பணிகளை வானிலை மைய அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். புயல் உருவாகியுள்ளதை அடுத்து, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கரையோரப் பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உரிய பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சூறாவளி புயலாக வலுப்பெற்றது. இது நாளை 3-ஆம் தேதி காலை நெல்லூர் – நர்சாபூர் இடையே தீவிர சூறாவளி புயலாக ஆந்திரக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுடன், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.