June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்த இந்தியர்களில் 3 பேர் வீடு திரும்பினர்

1 min read

3 Indians injured in terror attack in Germany return home

24.12.2024
ஜெர்மனியில் மக்திபர்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த 20-ந்தேதி இரவு குவிந்த மக்கள், பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, கார் ஒன்று அசுர வேகமாகத்தில் வந்து கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 37 பேருக்கு மித அளவிலான காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்கும்.
விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர். ஜெர்மனியில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார்.

இந்த சம்பவத்தில், இந்தியர்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 4 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனை பெர்லின் நகரில் உள்ள இந்திய தூதரகம், அதனுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளது.

அவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவையான ஆதரவையும் வழங்கி வருகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *