சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை
1 min read
Small screen actress Chitra’s father also commits suicide by hanging himself
31.12.2024
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் ஓய்வுபெற்ற காவலருமான காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கமால் இருந்ததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது காமராஜ் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2020 டிசம்பரில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.