June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

1 min read

PM Modi pays homage at Mahatma Gandhi’s memorial

30.1.2025-
1948 ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டு கொன்றார்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு விசாரணை நீதிமன்றம் கோட்சேவுக்கு மரண தண்டனை விதித்தது. 1949ஆம் ஆண்டு நவம்பரில் அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உள்ள அவரது படத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியறது துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காந்தியின் இலட்சியங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கின்றன. நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து மகாத்மா காந்திக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *