August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜி.டி.பி. வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்-பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்

1 min read

GDP growth to be between 6.3 and 6.8 percent – Economic Survey report

31.1.2025
பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.3 சதவீதத்தில் இருந்த 6.8 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள் வருமாறு:-

  • பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
  • நிலையான தனியார் நுகர்வு உள்ளிட்டவைகளால் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் சமநிலையில் உள்ளன.
  • அடிமட்ட அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும்.
  • காய்கறிகள் சீசன் மற்றும் காரிஃப் அறுவடை ஆகியவற்றால் 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.
  • 2026 நிதியாண்டில் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ஆபத்து குறைவாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது. உலகளவிலான புவிசார் அரசியல் பதட்டங்கள் பணவீக்கத்தில் இன்னும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

* 2024-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க தேர்தலைச் சுற்றியிருந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்க டாலர் வலுவான நிலையை பெற்றதாகும்.

கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட 2 புலிகள்
வைரலாகும் வீடியோ
போபால்,பிப்.1-
சமூக வலைதளங்களில் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். இவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்யும். குறிப்பாக சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டை காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் கன்ஹா புலிகள் காப்பகத்தில் 2 ஆண் புலிகள் கர்ஜனையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. 26 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 2 ஆண் புலிகளும் சண்டையிடும் போது கடும் உக்கிரத்தை காட்டின.

புலிகள் காப்பகத்துக்குள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை காப்பகத்தின் கலை இயக்குனர் ரவீந்திர மணி திரிபாதி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பயனர்களை கவர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *