June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா காப்புரிமை கோர முடியாது- டெல்லி ஐகோர்ட் அதிரடி

1 min read

Ilayaraja cannot claim copyright for the song En Iniya Pon Nilave – Delhi High Court takes action

31.1.2025
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன்.

இதையடுத்து, அகத்தியா பட டீசரில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை வெளியிட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரிகம நிறுவனம் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது. அந்தப் பாடலுக்கான காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *