June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

“3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கும் திட்டம்”- ஜனாதிபதி முரமு பேச்சு

1 min read

“Plan to make 3 crore women millionaires” – President Muramu’s speech

31/1/2025
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று குடியரசு தலைவர் முர்மு உரையாற்றினார். அவரது உரை வருமாறு:-

இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கும்பமேளா நெரிசலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்.

அண்மையில் நாட்டின் 75-வது ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை நிறைவு செய்தோம். நாட்டில் கோடிக்கணக்கான ஏழை எளியோரை மத்திய அரசு வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளது. மிகுந்த ஏழ்மையின் இருந்த 25 கோடி பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
முன் எப்போதையும் விட நாட்டின் வளர்ச்சி அதிவேகத்தில் அதாவது மும்மடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டம், நாட்டின் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனைத்து துறை வளர்ச்சியிலும் இந்தியா, உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடுத்தர வர்க்கத்தின் மேம்பாட்டை 8-வது ஊதிய குழு பரிந்துரைகள் நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன். 70 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மருத்துவ பயன்களை பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் அனைத்தையும் தடைகள் இன்றி டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த கேலோ இந்தியா போன்ற போட்டிகளை அரசு நடத்தி வருகிறது. 2047-ல் வலிமையான, வளர்ந்த பாரதம் என்ற நமது தாரக மந்திரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் மத்திய அரசின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்பதே இலக்காகும்.
சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜன் அஷவத் கேந்திரா திட்டம் மூலம் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாட்டின் முற்போக்கான செயல்பாட்டிற்கான படி நிலைகளில் ஒன்றாகவே அரசு கருதுகிறது. வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இளையோர் மேம்பாடு, விவசாயம், அறிவியல் துறைகளில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

தவறான வதந்திகள், டீப்பேக் வீடியோக்கள் மூலம் தேவையற்ற பதற்றம், சர்ச்சை உருவாவதை கண்காணித்து தடுக்கிறோம். சைபர் கிரைம்களை தடுப்ப திலும், அவற்றை கண்டறிந்து களையெடுப்பதிலும் அரசு அதி தீவிர கவனத்துடன் செயல்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறு வியாபாரிகள், சிறு வணிகர்கள் என்பதை அரசு முழுமையாக நம்புகிறது.

செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கம் அளிக்கப்படுகிறது. சிறு மற்றும் குறு தொழில் களில் ஈடுபடுவோருக்கு சுலபமாக கடன் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த் தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறு வியாபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பலன் அடைந்துள்ளது சமூக நீதியின் அம்சமாகும்.

உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் 100-வது ராக்கெட்டை வெற்றி கரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில் நுட்பத்திலும் இந்தியா சாதனை படைக்கும்.

நாட்டின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முதன்மை கருவியாக அரசு பயன்படுத்துகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் அமைக் கப்பட்டுள்ளது. இளைய பாதுகாப்பில் செயறல் திறனை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து பணி யாற்றுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரெயில்வே போக்குவரத்து மூலம் நாடு இணைக்கப்படும். உலக அளவில் டிஜிட்டல் தொழில் நுட்ப துறையில் முக்கிய நாடாக இந்தியா தனது இருப்பை வைத்து உள்ளது.

இந்தியாவின் யு.பி.ஐ. பரிவர்த்தனை முறையால் பல்வேறு நாடுகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. சமத்துவம், சமூக நீதிக்கான ஒரு கருவியாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது.

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டி.ஏ.பி. உரம் வழங்க மானியம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 30 கோடி மக்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை தரப்பட்டுள்ளது. 9 கோடி மகளிருக்கு புற்றுநோய் கண்டறிதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பால், தானிய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் ஒற்று மையாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மான், நிகோபார் தீவுகளுக்கு வளர்ச்சியின் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் 30 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது. தேர்தல் அமைதியாக நடந்ததற்கான பெருமை ஜம்மு காஷ்மீர் மக்களை சேர்கிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பாதையில் இணைந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. நாட்டில் 1.75 லட்சம் ஆரோக்கிய மந்திர் நிறுவப்பட்டுள்ளது. ஆரோக்கிய மந்திர் திட்டம் மூலம் அனைவருக்குமான ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறை தயாராகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் பங்களிப்பை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியா ஏ.ஐ. மிஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவை உலகளாவிய புத்தாக்க சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

3 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடு கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

1,500 பழைய, தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு கர்ம யோகி திட்டம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் எல்லைகளில் உள் கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் நிர்வாகத்திற்கு சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவை தூண்களாக மாறி விட்டன.

இளைஞர்களின் கல்வி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளது. பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் தனது இலக்கை பூர்த்தி செய்து வருகிறது.

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு நிறைவேற்றப்படும். அனை வருக்குமான வளர்ச்சி என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம்.

நாம் 140 கோடி மக்களாக இருந்தாலும் பாரதம் என்பது நம் ஒரே அடையாளம். நாட்டை வளர்ச்சி அடைந்த தேசமாக உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய அரங்குகளில் இந்தியா திறம்பட செயல்படுகிறது. அசாம், பெங்காலி, மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை அரசு தந்து உள்ளது. பட்டியலினத்தோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் திட்டங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் பயனாளிகளாக உள்ளனர். சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது. வீடுகளின் கூரைகள் மீது சூரிய ஒளி மின்சார தகடு அமைக்கும் பணிக்கு மானியம் வழங்கப்படுகிறது.

எதிர்கால சந்ததியினர் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் பலன்களை பெறுவார்கள்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு உள்ளது. 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள், வளர்ச்சியை நினைத்து பெருமை அடைகிறேன்.

தலைநகர் டெல்லியில் மெட்ரோ கட்டமைப்பின் தூரம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மெட்ரோ நெட்வொர்க் தற்போது 1000 கிலோ மீட்டர் என்ற மைல் கல்லை அடைந்துள்ளது.

கர்ப்பிணிகள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை துல்லியமாக கண்காணிக்க யு-வின் போர்டல் தொங்கப்பட்டு உள்ளது.

10 வருடங்களில் உயர்கல்வி நிறுவனங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. வலிமையான இந்தியா உருவாகி வருகிறது.

இவ்வாறு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *