தென்காசியில் மனிதநேய வார நிறைவு நாள் விழா
1 min read
Humanitarian Week Closing Ceremony in Tenkasi
31.1.2025
தென்காசியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இசிஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வாரவிழா நிறைவு நாள் விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமை தாங்கினார்.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏழுநாட்கள் மனிதநேயவார விழாவாக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கொண்டாடப்படுகிறது.
மனிதநேயவாரவிழாவின் போது தீண்டாமை மற்றும் அதனைச்சார்ந்த சமூகசீர்கேடுகளை களைதல் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி. பொருளாதார சமூக மேம்பாட்டிற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பொதுக்கூட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விரிவாக எடுத்துரைப்பதுடன் குடியுரிமைகள் பாதுகாப்புச்சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கூறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் மனிதநேய வாரவிழா 24.012025 அன்று தொடங்கப்பட்டு தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. 25.012025 அன்று ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களை கொண்டு மனித நேயம் தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற கலைத்திறன் போட்டிகளும், 26.012025 அன்று ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 10,11:12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியர்களை கொண்டு தீண்டாமை ஒழிப்பு பேரணியும், 27.01.2025 அன்று அனைத்து மதத்தலைவர்களையும், ஆதிதிராவிடர் சான்றோர்களையும் கொண்டு நல்லிணக்க கூட்டமும், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்களைக்கொண்டு வன்கொடுமை தடுப்புச்சட்டங்கள் குறித்த கருத்தரங்கும். 28.01.2025 அன்று தீண்டாமை ஒழிப்பு மற்றும் மனிதநேயம் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கலைமன்றத்திலும், 29.012025 அன்று தென்காசி மாவட்ட தொழில் மையத்தில் வைத்து சமுதாயத்தில் முன்னேறிய நிலையிலுள்ள அலுவலர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில் முனைவோர். அரசியல்வாதிகள் ஆகியோர்களைக்கொண்டு சமுதாயப்பொருளாதார முன்னேற்றச் சிந்தனை கூட்டங்களும் நடத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், 2023 2024 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி காப்பாளர், காப்பாளினிகள் 16 நபர்களுக்கும், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி காப்பாளர், காப்பாளினிகள் 16 நபர்களுக்கும் என மொத்தம் 32 காப்பாளர். காப்பாளினினிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும். பேச்சுப்போட்டி. கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 465 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) ஆ.அனிதா, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் (தென்காசி) பட்டமுத்து. ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் (சங்கரன்கோவில்) பா.சுப்பையன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.