தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக கார்த்திக்குமார் நியமனம்
1 min read
Karthikumar appointed as Secretary of Tenkasi South District MGR Youth Team
31.1.2025
தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் மேலகரம் ஏ.கார்த்திக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் தலைவராக இலஞ்சி எஸ் கே எஸ் பிரபு, துணை தலைவர்களாக சுரண்டை வி.ராமர், கடையம் பி. மணிகண்டன், செல்வ விநாயகர் புரம் பி. பழனியப்பா, பெத்தநாடார்பட்டி எம் திருமலைக் குமார், ஊத்துமலை கே. முத்துக்குமார் ஆகியோரும் தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் மேலகரம் ஏ கார்த்திக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் இணைச்செயலாளர்களாக தாயார் தோப்பு பிஜிஆர்.அரவிந்தன், முக்கூடல் சேவியர் ரஜினி, பெத்தநாடார்பட்டி கிருஷ்ணராஜா, ஆலங்குளம் கே .பி.எஸ்.குமரன், சிவலார்குளம் செல்வராஜ், வீராணம் கோமதி பாண்டியன், ஆயிரப்பேரி உமா மகேஸ்வரன், தென்காசி எஸ்.கிருஷ்ணராஜா, எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்களாக வீராணம் பாக்யராஜ், ஆவுடையானூர் கேசவன், சிவ நாடானூர் சிவ பொன்சிங், , ஆவுடையானூர் கோபி என்ற குத்தாலிங்க ராஜன், தென்காசி ஆனந்த், கீழக்கலங்கல் முத்து, குறும்பலாப்பேரி எம். பொன்ராஜ், கபாலிபாறை எஸ். முப்புடாதி ஆகியோரும், மாவட்ட பொருளாளராக தென்காசி எம் கருப்பசாமி ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ள
தாகவும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மேற்கண்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு செயல்படுமாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.