மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்- பிரதமர் மோடி பேட்டி
1 min read
Union Budget will give new impetus and hope – PM Modi interview
31.1.2025
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்குகிறது. 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வளமும், வளர்ச்சியும் பெறவேண்டுமென நான் கடவுள் மகா லெட்சுமியை பிரார்த்திக்கிறேன். நாட்டின் ஏழைகள், நடுத்தர மக்களை கடவுள் மகா லெட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன். இந்தியா ஜனநாயக நாடாக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மிகவும் பெருமிதம் அளிக்கிறது.
உலக அரங்கில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எனது 3வது ஆட்சி காலத்தில் இது முதல் முழுமையான பட்ஜெட் ஆகும். 2047ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும். அதற்காக தற்போதைய மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்’ என்றார்