June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பெரியார்தான் எங்களுக்குத் தலைவர்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min read

Periyar is our leader: MK Stalin is proud

31.1.2025
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராப் போட்டும், செல்பிக்கு போஸ் கொடுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார்.
அதனபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு வருடத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவோம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது; அதனால்தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன.

கவர்னர் எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லதாகவே உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது.

பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார்தான் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே, அவதூறுகளை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *