June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்-9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

1 min read

The day after tomorrow, the 10th class public examination begins – 9 lakh students are writing it

26.3.2025
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி நாளை நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதுகிறார்கள்.

12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத தயா ராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத் தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது.

மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்து தல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 2,3 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *