August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில்  சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசு

1 min read

Prize distribution to the best silk farmers in Tenkasi

29.3.2035

தென்காசி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2024-2025 ஆம் ஆண்டு மாநிலத்திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்குதல்” திட்டத்தில் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான பரிசுகளை பெற்ற தென்காசி மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்  வாழ்த்தினார்கள்.

தென்காசி மாவட்டம், பட்டு வளர்ச்சித்துறை, பட்டு விவசாயிகளை ஊக்ககுவிக்கும் வகையில் 2024-2025 ஆம் ஆண்டு மாநிலத்திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்குதல் திட்டத்தில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநில அளவிலான முதல், இரண்டாம், மூன்றாம் ரொக்கப்பரிசுகளை பெற்றுள்ளனர். அதில் முதல் மற்றும் மூன்றாம் ரொக்கப்பரிசுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (25.03.2025) அன்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கி சிறப்பித்துள்ளார். சிறந்த பட்டு விவசாயிகளுக்கான பரிசுகளை பெற்ற விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இஆப, அவர்களை இன்று (28.03.2025) நேரில் சந்தித்து பரிசுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2024-2025ஆம் ஆண்டு மாநிலத்திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்குதல் திட்டத்தில் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகளான தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், அடைக்கலபட்டணம் கிராமத்தை சார்ந்த திரு.சு.ஜேக்கப், த/பெ சுசிகர் சௌந்தரராஜ் என்பவர் ஜனவரி2024 முதல் டிசம்பர் 2024 வரையில் ஒரு ஏக்கர் மல்பெரி பரப்பில் 1217 எண்ணம் முட்டைத்தொகுதிகள் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு 1205.167 கிலோகிராம் பட்டுக்கூடுகள் அறுவடை செய்து ஆண்டு வருவாய் ரூ.601672 பெற்றதற்காக முதல் பரிசு ரூ.1,00,000/-மும், கடையநல்லூர் வட்டம். சாம்பவர் வடகரை கிராமத்தை சார்ந்த திருவைரமேஷ், த/பெ வைத்திலிங்கம் என்பவர் ஜனவரி2024 முதல் டிசம்பர் 2024 வரையில் ஒரு ஏக்கர் மல்பெரி பரப்பில் 1063 எண்ணம் முட்டைத்தொகுதிகள் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு 995.875 கிலோகிராம் பட்டுக்கூடுகள் அறுவடை செய்து ஆண்டு வருவாய் ரூ.495918 பெற்றதற்காக இரண்டாம் பரிசு 75,000/-மும், ஆலங்குளம் வட்டம். கோவிலூற்று கிராமத்தை சார்ந்த திரு. வை.அருள்குமரன், த/பெ. வைகுண்டம். என்பவர் ஜனவரி2024 முதல் டிசம்பர் 2024 வரையில் ஒரு ஏக்கர் மல்பெரி பரப்பில் 1050 எண்ணம் முட்டைத்தொகுதிகள் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு 949.650 கிலோகிராம் பட்டுக்கூடுகள் அறுவடை செய்து ஆண்டு வருவாய் ரூ.457364 பெற்றதற்காக மூன்றாம் பரிசு ரூ.50,000/-மும் பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு.சு.ஜேக்கப் என்பவருக்கு முதல் பரிசு 100,000/-தினையும், திரு.வை.அருள்குமரன், என்பவருக்கு மூன்றாம் பரிசு ரூ.50,000/- ரொக்கப்பரிசுகளை காசோலையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.03.2025 அன்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வே).ச.கனகம்மாள், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் க.நிஷாந்தி, பட்டு ஆய்வாளர் சி.ஜெயந்தி, மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

One attachment • Scanned by Gmail

ReplyReply allForwardAdd reaction

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *