குற்றாலம் கோவில் சித்திரை விசு திருவிழா தொடங்கியது
1 min read
Courtallam Temple Chithirai Vishu festival begins
6.4.2025
தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
குற்றாலம் குற்றால நாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா 10 நாட் கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாரதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவ பூத கனவாத்தியங்களும் இசைக்கப்பட்டன பூஜை களை ஜெயமணி சுந்தரம் பட்டர், பிச்சுமணி பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
இதில் அறங்காவலர்குழுத் தலைவர் சக்தி முரு கேசன், உதவி ஆணையர் ஆறு முகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீர பாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், கல்யாண சுந்தரம், அருண், சொக்கம்பட்டி 6ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் வெள்ளத்துரை, சுப்பையாபாண்டியன், செல்வகுமார், தங்கபாண் டியன், முத்துக்குமார், முத் துபிரகாஷ், சண்முகையா, வெள்ளத்துரை, கார்த்திக், சரவணக்குமார், மணிகண்டன், சந்தனப்பாண்டி, சக்திவேல், மருதுடையார், வேல்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், சுரேஷ் உள்பட திரளான பக்தர் கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் 11ம் தேதி காலை 9.30 மணிக்கும். இரவு 7 மணிக்கும் கோயிலில் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபா ராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 10 மணிக்கு கோயில் உள் மண்டபத் தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
14ம் தேதி காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விசு தீர்த்தவாரி நடக்கி றது. இந்த ஆண்டு குற் றாலம் சித்திர சபையில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கி பாலாலயம் செய்யப்பட்டு விட்டதால் தேரோட்டம் நடைபெறாது. சுவாமி-அம்பாள் அம்பாள் வீதி வீதி உலா திருக் கோயில் உள் மண்டபத் தில் மட்டும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.