June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்

1 min read

AIADMK members came to the assembly wearing black shirts for the 2nd day

9.4.2025
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்றைய தமிழக சட்டசபை நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். மேலும் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *