இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்-டிரம்ப் அறிவிப்பு
1 min read
Trump announces progress in trade talks with India
1.5.2025
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். இதற்கிடையே இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்காவிற்குச் சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.