June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி துணை அஞ்சலகங்களில் பார்சல் பேக்கேஜ் மையம் தொடக்கம்

1 min read

Parcel and Package Center launched at Tenkasi Sub-Post Offices

4.5.2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சுரண்டை, புளியங்குடி, அஞ்சலகங்களில் பொதுமக்களின் நலன் கருதி பார்சல் பேக்கேஜ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கிய
கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- .

தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் தங்கள் பார்சல்களை பேக்கிங் செய்து அனுப்புவதிலுள்ள சிரமத்தை தவிர்க்கும் வண்ணம் கோவில்பட்டி, சங்கான்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் பார்சல் பேக்கேஜிங் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சேவை புதிதாக கடயநல்லூர், புளியங்குடி மற்றும் சுரண்டை துணை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தச் சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் பார்சல் பேக்கிங்கிற்குத் தேவையான பெட்டிகளை தபால் நிலையங்களில் குறைந்த விலையில் வாங்கலாம். வெவ்வேறு அளவுகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பெட்டிகள் கிடைக்கின்றன. பொது மக்கள் கொண்டு வரும் பார்சல்களுக்கு பார்சல் பேக்கிங் மையத்தில் பிரத்யேக பேக்கிங் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த சேவையின் மூலம் எந்த சேதமும் இல்லாமல் பார்சல்கள் பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்றடையும்.

அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *