August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் மே 18 வரை நீட்டிப்பு

1 min read

India-Pakistan ceasefire extended till May 18

16.5.2025
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

3 நாட்கள் நடந்த இந்த சண்டையில் இரு நாடுகளும் டிரோன்களால் தாக்கிக்கொண்டன. இதற்கிடையே கடந்த மே 10 அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளை சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்(டிஜிஎம்ஓ) விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்களும் எல்லையில் உள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. எல்லையில் உள்ள படைகளின் அளவை குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *