June 23, 2026

Seithi Saral

Tamil News Channel

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் சாவு

1 min read

2 people die after undergoing hair transplant surgery

17.5.2025
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

17.5.2025
இளம் வயதில் தலை முடி கொட்​டு​வ​தால், தம்மை அழகாக்​கிக் கொள்ள ஆண், பெண் இரு​பாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்​கின்​றனர். இதற்​காக உ.பி.யின் கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​து​வ​மனைக்கு இளம் பொறி​யாளர்​கள் 2 பேர் சிகிச்​சைக்​காக வந்​துள்​ளனர்.

அவர்​களில் உ.பி.​யின் பரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்​பர் 18-ல் அனுஷ்கா மருத்​து​வ​மனை​யில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்​றார். ஆனால் 24 மணி நேரத்​துக்கு பிறகு முகம் வீங்​கி, மயங்​கின் உடல்​நிலை மோசமடைந்​தது. மறு​நாள் 19-ல் மயங்க் உயி​ரிழந்​தார். அதே​போல் கான்​பூர் பவர் ஹவுஸ் பகு​தியை சேர்ந்த பொறி​யாளர் வினீத் துபே​வும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயி​ரிழந்​துள்​ளார்.

இரு​வரது குடும்ப உறுப்​பினர்​களும் டாக்​டர் அனுஷ்கா மீது புகார் அளித்​தனர். போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​க​ாததால் முதல்​வர் ஆதித்​ய​நாத்​தின் இணை​யதளத்​தில் புகார்​கள் பதிவேற்​றப்​பட்​டன.

இதையடுத்து வினீத் மனைவி அளித்த புகாரின்​படி கல்​யாண்​பூர் பகுதி காவல் நிலை​யப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க தொடங்கி உள்​ளனர். இந்த தகவல் பரவியதும் முடி மாற்று அறுவை சிகிச்​சை​யால் பாதிக்​கப்​பட்ட வேறு பலரும் டாக்​டர் அனுஷ்கா மீது புகார் அளித்​தனர். இதனால், மருத்​து​வ​மனையை மூடி​விட்டு அனை​வரும் தலைமறை​வாகி விட்​டனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், முடி மாற்று அறுவை சிகிச்​சைக்​கான எந்த தகு​தி​யும், பயிற்​சி​யும் டாக்​டர் அனுஷ்கா​வுக்கு இல்லை என தெரிந்​துள்​ளது. இந்த சிகிச்​சைக்​காக டாக்​டர் அனுஷ்கா ஒவ்​வொரு​வரிடம் ரூ.40,000 முதல் ஒரு லட்​சம் வரை பெற்றுள்ளார்.

இதுகுறித்து கல்​யான்​பூர் பகுதி காவல் துறை உதவி ஆணை​யர் அபிஷேக் பாண்டே கூறும்​போது, ‘‘டாக்​டர் அனுஷ்கா பல் மருத்​து​வம் மட்​டுமே பயின்​றவர் என விசா​ரணை​யில் தெரிந்​துள்​ளது. தலைமறை​வானவர்​களை தீவிரமாக தேடி வரு​கிறோம்’’ என்​றார். மேலும், உ.பி.​யின் மற்ற பகு​தி​களில் முடி மாற்​று அறு​வை சிகிச்​சை செய்​பவர்​களிட​மும்​ போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.


மேலும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *