August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

புனலூர் அருகே ரயிலில் இருந்து தள்ளிவிட்டு ஓட்டல் தொழிலாளி கொலை ? – ஒருவர் கைது

1 min read

Hotel worker murdered after being thrown from train near Punalur? – One arrested

18.5.2025
தமிழக கேரளா எல்லை பகுதியான கேரள மாநிலம் புனலூர் அருகே, நள்ளிரவில் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஒரு நபரை கொட்டாரக்கரை அருகே மயிலம் எடவோம் பாலம் அருகே கீழே தள்ளிவிட்டு ஒரு கும்பல் கொலை செய்ததாக புனலூர் போலீசாருக்கு ரயில் பயணிகள் சிலர் தகவல் தெரிவித்தனர் .

அதனைத் தொடர்ந்து புனலூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புனலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்படி முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பதும், அவர் கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த நிலையில், சொந்த ஊருக்கு அவர் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது யார்? என்பது குறித்து திருவனந்தபுரம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சஜித்குமார் அவர் பயணித்த பொது பெட்டியில் சக ரயில் பயணிகளிடம் விசாரணை நடத்தியதில், கொல்லத்திலிருந்து செங்கோட்டைக்குச் செல்ல வந்த 7 பேர் கொண்ட குழுவினர் குடிபோதையில் ரயிலில் ஏறியதும், அந்தக் குழுவினரில் இருவர் இடையே சண்டை ஏற்பட்டது அந்த சண்டையில் ஒருவர் மற்றொருவரை அடிக்க முயன்று தள்ளிய போது அவர் தடுமாறி ரயில் பெட்டியில் வாசல் கதவின் அருகே நின்று கொண்டிருந்த செந்தில் குமார் மீது விழுந்துள்ளார்.

இதில் செந்தில்குமார் நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 நபர்களையும் அந்தப் பெட்டியில் இருந்த சக பயணிகள் 30 பேர் இடமும் நடத்திய விசாரணையில் செங்கோட்டை சேர்ந்த குட்டி ராஜா (வயது 33) என்பவர் மீது குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு புனலூர் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்களில் கொட்டாரக்கரை சிறைக்கு அனுப்பப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *