மயிலாடுதுறை- செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
1 min read
Mayiladuthurai-Sengottai train operates on a diversion route
20.5.2025
மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு- வாடிப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்:16847 மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு செல்லும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது. இந்த ரெயில் கூடுதலாக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, திருவனந்தபுரம் கோட்டத்தில் காயங்குளம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்: 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு வழியில் வசதியான இடத்தில் 45 நிமிட நேரம் நிறுத்தப்படும். வண்டி எண்: 16187 காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மே 24ந்தேதி காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழியில் வசதியான இடத்தில் 45 நிமிடம் நிறுத்தப்படும். வண்டி எண்: 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த தகவல்களை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.