June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றார்

1 min read

MK Stalin went to Delhi to attend the NITI Aayog meeting.

23.5.2025
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் ‘நிதி ஆயோக்’ கூட்டம், நாளை (மே 24) டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முக்கிய பிரமுகர்களை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார்.

இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *