தென்காசி அருகே புகையிலை பொருட்கள் கடத்தல்-3 பேர் கைது
1 min read
Tobacco smuggling near Tenkasi-3 arrested
24/5/2025
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போதுஸ அதில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து இங்கு விற்பனைக்காக போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடகா மாநிலம் சரஸ்வதிநகர்
தர்மாராம் என்பவரின் மகன் ஆத்மா ராம் (வயது 26), ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஓமா ராம் என்பவரின் மகன் ஜெகதீஷ் (வயது 21), தெற்கு பூலாங்குளம் குத்தாலிங்கம் என்பவர் மகன் முருகன் (வயது 35 ) மற்றும் ரெட்டியார்பட்டி வைத்திலிங்கம் என்பவரின் மகன் பெருமாள் (வயது51) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, ஆத்மாராம், ஜெகதீஷ், மற்றும் பெருமாள், ஆகிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 3,87,504 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.