தென்காசி மாவட்டத்தில் மினி பேருந்து புதிய மற்றும்இடம்பெயர்வு வழித்தடங்கள்
1 min read
Mini bus new and migration routes in Tenkasi district
15.6.2025
தென்காசி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட இரண்டு வழித்தடங்கள் மற்றும் தென்காசி சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மினி பேருந்து விரிவான திட்டம் 2024 இன் கீழ் இடம் பெயர் விருப்பம் தெரிவித்துள்ள ஏற்கனவே மினி பேருந்து இயக்கி வரும் அனுமதி சீட்டு தாரர்களின் விவரங்கள் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தென்காசி மாவட்டத்தில் மினி பேருந்து இரண்டு புதிய வழித்தடங்கள் கோவிந்தப்பேரி பஸ் நிலையம் முதல் புல்லுக்காட்டு வலசை பிள்ளையார் கோவில் வரை மற்றும் தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் வல்லம் தாஜ்மஹால் ஹோட்டல் வரை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இடம் பெயர்வு மற்றும் வழித்தடம் நீடித்தல் பட்டியலில் 20 வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளது அதன்படி
1.தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் முதல் பண்பொழி மசூது ராவுத்தூர் மேல்நிலைப்பள்ளி வரை
2.தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் முதல் பண்பொழி மசூது ராவுத்தூர் மேல்நிலைப்பள்ளி வரை
3.தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் முதல் பண்பொழி மசூது ராவுத்தூர் மேல்நிலைப்பள்ளி வரை
4.சுரண்டை பேருந்து நிலையம் முதல் தயார்தோப்பு வரை
5.சுரண்டை பேருந்து நிலையம் முதல் தயார்தோப்பு வரை
- தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் வல்லம் மேல்பள்ளி வாசல்
7.தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் செங்கோட்டை வரை
- கீழகலங்கல் முதல் கம்பிளி வரை
9.கீழகலங்கல் முதல் கம்பிளி வரை
10.கடனா அணை பேருந்து நிலையம் முதல் கடையம் அரசு மருத்துவமனை வரை
11.கடனா அணை பேருந்து நிலையம் முதல் கடையம் அரசு மருத்துவமனை வரை
- கடையம் அரசு மருத்துவமனை முதல் கடனாஅணை பேருந்து நிலையம் வரை
- பாவூர்சத்திரம் முதல் அண்ணாசாமி ராஜம்மாள் பெண்கள் நர்சிங் கல்லூரி வரை
- பாவூர்சத்திரம் முதல் அண்ணாசாமி ராஜம்மாள் பெண்கள் நர்சிங் கல்லூரி வரை
- சுரண்டை காமராஜர் மார்க்கெட் முதல் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் வரை.
16.பழைய பேருந்து நிலையம் முதல் கலங்காதகண்டிவரை
17.தென்காசி புதிய பேருந்து நிலையம் முதல் சின்ன குற்றாலம் வரை
18.பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முதல் TNHB காலனி வரை
- பூலாங்குளம் முதல் ஆலங்குளம் பேருந்து நிலையம் வரை
- பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முதல் பூவனூர் அண்ணாச்சி ரைஸ்மில்வரை மேலும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்
வழித்தட எண் – 01
ஊத்துமலை மேற்கு பேருந்து நிறுத்தம் முதல் பணவடலிச்சத்திரம் வரை
- உடப்பன்குளம் (இராயல் பாலிதின் கம்பெனி) முதல் கோ.மருதப்பபுரம் வரை
03.வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் முதல் சிங்கிலிபட்டி RM எடை மேடை வரை
04.வாசுதேவநல்லுர் ST செங்கல் ஆலை முதல் தலைவன்கோட்டை வரை
மேற்கண்ட இடம்பெயர்வு பட்டியலில் உள்ள வழித்தடங்கள் அனைத்தும் ஏற்கனவே இந்த வழித்தடத்தில் அனுமதி சீட்டு பெற்றுள்ள சிற்றுந்து உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. இப்புதிய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழித்தடத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். உரிமையாளர்கள் இந்த புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கிலோமீட்டர் கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.
மேலும் கோவிந்தப்பேரி பஸ் நிலையம் முதல் புல்லுக்காட்டு வலசை பிள்ளையார் கோவில் வரையும் தென்காசி பழைய பேருந்து நிலையம் முதல் வல்லம் தாஜ்மஹால் ஹோட்டல் வரை உள்ள புதிய வழித்தட விண்ணப்பத்திற் கான கடைசி தேதி 20.06.2025 ஆகும்.
மேற்கண்டவாறு பெறப்பட்ட விண்ணப்பமானது மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989 மற்றும் அரசாணை எண் 33 உள் போக்குவரத்து துறை நாள் 23.01.25 ன் படியும் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.