June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐந்தருவியில் கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை ஒப்படைத்த தம்பதி

1 min read

Couple hands over 2 pounds of gold chain found at Aintharuvi

22.6.2025
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவிப்பகுதியில் வேலை கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அருவிக்கு குளிப்பதற்காக வந்தபோது
சுமார் இரண்டு பவுன் தங்க கை செயின் கீழே கிடந்துள்ளது.

அதனை பார்த்த சதீஷ்குமார் தம்பதியினர் அந்த தங்க கைச்செயினை எடுத்து குற்றாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மாணிக்க செல்வியிடம் ஒப்படைத்தனர்.

இது பற்றி தகவலறிந்த குற்றாலம் காவல்நிலைய
இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் சதீஷ்குமார் தம்பதியரின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *