June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை

1 min read

Special puja for the 27 star trees at Thoranamalai

13.7.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இக்கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட புராதானமும் பெருமையும் உடைய கோயிலாகும். இந்த கோவிலில் தமிழ் கடைசி வெள்ளி, பௌர்ணமி கிரிவலம் மட்டுமின்றி ஞாயிறு தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேய ஏராளமான பக்தர்கள் வந்து மலைமீது ஏறி முருகனையும், பத்திரகாளி அம்மனையும் தரிசனம் செய்து வருகிறார்கள். அதேபோல் மாணவ-மாணவிகள் வருகை தந்து நூல்நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று (13-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. காலையில் வல்லப விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மலையேறினார்கள்.
அடிவாரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சன்னதிக்கு பின்புறம் உள்ள பழமையான அரசு ஆல மரங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை அடுத்து சப்த கன்னியருக்கும் அதன் அருகே உள்ள சுனை நீருக்கும் பூஜை நடந்தது. மேலும் கோவிலில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திர விருட்சங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான நட்சத்திர மரத்தில் மலர் தூவி வழிபாடு மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுதவிர இளம் பெண்கள் கந்தசஷ்டி கவசம் படித்தனர். திருக்குறள் ஒப்புவித்த சிறுவர் சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த இளைஞர்கள் நூல்நிலையத்தில் போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை தேர்வு செய்து படித்தனர். பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது. காலையில் 1002 பேரும் மதியம் 955 பேரும் சாப்பிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *