August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவள்ளூர்: ஆயில் ஏற்றிவந்த ரெயிலில் தீ விபத்து

1 min read
Thiruvallur: Fire breaks out in train carrying oil 
13/7/2025
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்படது. சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. இந்த விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *