June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 18 கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

1 min read
Appointment of 18 village assistants in Tenkasi district
16.7.2025
தென்காசி மாவட்டத்தில் 18 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தமிழக அரசால் ஆணையிடப் பட்டுள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு
தென்காசி தாலுகா பகுதியில் (2) மேலப்பாவூர், திப்பணம்பட்டி , செங்கோட்டை தாலுகாவில் (3) பண்பொழி, மேக்கரை, வடகரை கீழ்ப்பிடாகை , ஆலங்குளம் தாலுகா பகுதியில் (5) ஆண்டிப்பட்டி, மருதம்பத்தூர், கடங்கநேரி, பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், கடையநல்லூர் தாலுகா பகுதியில் (4) இராமசாமிபுரம், அச்சன்புதூர், இடைகால், ஆய்க்குடி, சிவகிரி தாலுகா பகுதியில் (3) பட்டக்குறிச்சி, இராயகிரி, விஸ்வநாதப்பேரி , திருவேங்கடம் தாலுகா பகுதியில்(1) சங்குப்பட்டி என மொத்தம் 18 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி காலிப்பணியிட கிராமங்கள் விபரம். தேர்வு விபரம். தகுதிகள் விபரம், விண்ணப்பிக்கும் முறை, இனச்சுழற்சி விபரம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் ஏற்கனவே 14.07.2025அன்று பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி மாவட்ட இணையதளமான tenkasi.nic.in இணையதளத்தில் மேற்படி விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 14.072025 முதல் 12.082025 வரை விண்ணப்பமாதிரியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் 12.08.2025-க்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *