June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் பிறந்த தின விழா

1 min read
Kamaraj's birthday celebration on behalf of Tenkasi South District DMK 
16.7.2025
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாவூர்சத்திரம் காமராஜர் சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த தின விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொகுதி மேற்பார்பார்வையாளர் கலைகதிரவன், ஒன்றிய செயலாளர்கள் ஜெ. கே.ரமேஷ், பொன்செல்வன், க.சீனித்துரை, யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, சேக்முகமது, ஒன்றிய கவுன்சிலர்கள் வளள்ராஜா, ராஜேஸ்வரி, கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்அறிவழன், முன்னாள் துணைத்தலைவர் தங்கராஜ், அயலக அணி துணை அமைப்பாளர் நாகராஜன், நிர்வாகிகள் சமுத்திரபாண்டி, ஜேசுராஜன், தங்கராஜ், மதிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *