June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்தளம்பாறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி போக்சோவில் கைது

1 min read
Mattalambarai: Worker arrested under POCSO for sexually harassing minor girl 17/7/2025
மத்தளம்பாறையில் குடி போதையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் சரகம் மத்தளம்பாறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50) இவர்
கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். மத்தளம்பறையில் இன்னொரு பகுதியில் உள்ள 7வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் விளை யாடிக் கொண்டிருந்தார் அப்போது சிறுமியின் அருகே வந்த முத்துக்குமார் திடீரென சிறுமிக்கு பாலியல் தொல்லை
கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று தனது தாயிடம் நடந்தவற்றை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனே இதுகுறித்து தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
கொடுத்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மதுபோதையில் முத்துக்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முத்துக்குமார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *