A 9th grade student hanged himself to death near Alankulam!
17.7.2025
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு மனைவியும், நகுல் சுவதீப் (வயது13) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி செய்து வருகிறார். நகுல்சுவதீப் ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளி யில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நகுல்சுவதீப் கபடி விளையாட சென்று சென்று விட்டு நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. இதனை அவனது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த நகுல்சுவத்தீப் வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டான். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீ சார் சம்ப சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாண வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.