June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் நெகிழி ஒழிப்பு துப்புரவு பணி- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Plastic eradication cleaning work in Courtallam – Collector participates

19.7.2025
தென்காசி வன கோட்டம் குற்றாலம் காப்புக்காடு மற்றும் அறநிலையத்துறை வாகன காப்பக பகுதிகளில் வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் மாபெரும் நெகழி ஒழிப்பு துப்புரவு பணி நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் அவர்களின் உத்தரவின்படி இன்று தமிழகம் முழுவதும் நெகிழி தூய்மை பணி நடைபெற்றது அதன் அங்கமாக தென்காசி வன கோட்டம் குற்றாலம் காப்புக்காடு மற்றும் அதன் அருகில் உள்ள அறநிலையத்துறை வாகன காப்பக பகுதிகளில் வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி. முன்னிலையில் மாபெரும் நெகழி ஒழிப்பு துப்புரவு பணி நடைபெற்றது.

இத்தூய்மைப்பணியில், குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன், செயல் அலுவலர் சுஷாமா, தென்காசி உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம், தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை, கடையநல்லூர், செங்கோட்டை வனச்சரகம் பணியாளர்கள், குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர்கள். பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *