June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி:கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

1 min read
Two arrested for selling ganja under the Gangster Prevention Act
19.7.2025
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த இரண்டு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கடங்கநேரி நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் முருகேசன் (வயது 45) மற்றும் அச்சன்புதூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் ஒடுக்கத்து தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (வயது 21) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *