August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 8 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்-கலெக்டர் உத்தரவு

1 min read

8 Tahsildars transferred in Tenkasi – Collector orders

3.8.2025
தென்காசி மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்கள் நிலையில் நியமனங்கள் மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியர் வி.ஆதிநாராய ணன் ஆலங்குளம் வட்டாட்சியராகவும், ஆலங்குளம் வட்டாட்சியர் கே.ஓசன்னா பெர்ணாண்டோ வீ.கே. புதூர் தனி வட்டாட்சியராகவும், செங்கோட்டை வட்டாட்சியர் எஸ் வெங்கடேஷ் வீ.கே.புதூர் வட்டாட்சியராகவும், வீ.கே.புதூர் வட்டாட்சியர் சி .சுடலைமணி ஆலங்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், ஆலங்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எம். அப்துல் சமது சிவகிரி வட்டாட்சியராகவும், வீ.கே.புதூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஆர்.வெங்கட சேகர் செங்கோட்டை வட்டாட்சியராகவும், கடையநல்லூர் அலகு – 1 நத்தம் நல வரி திட்ட தனி வட்டாட்சியர் கங்கா கடையநல்லூர் அழகு – 2 நத்தம் நல வரி திட்டம் தனி வட்டாட்சியராகவும், கடையநல்லூர் அலகு – 2 நத்தம் நல வரி திட்டம் வட்டாட்சியர் ஏ.ரோசன் பேகம் தென்காசி நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமனம்செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *