August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் படிபூஜை -திரை கலைஞர்கள் பங்கேற்பு

1 min read

oplus_131074


Padi Pooja at Thoranamalai – participation of film artists

3.8.2025
தோரணமலையில் டாக்டர் தர்மராஜ் அவர்களால் அகன்ற படிக்கட்டு அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1193 படிகள் மற்றும் மலைப்பாதையில் ஆறு மண்டபங்கள் அமைக்கப்பட்டு உ்ள்ளது. ஆடிப்பெருக்கு அன்று இந்த படிக்கட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும் படிபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி அகன்ற படிக்கட்டின் 5-வது ஆண்டு விழா இன்று(3.8.2025) நடந்தது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் படிபூஜை நடந்தது. படிக்கட்டில் கோவில் அறங்காவலர் செண்பகராமன் முன்னிலையில் டாக்டர் தர்மராஜ் படியில் புனிதநீர் ஊற்றி பூக்களை தூவினார்.
மேலும் இன்று விநாயகர் சன்னதிக்கு பின்புறம் உள்ள ஆலம் அரச மரத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதனை அடுத்து கன்னிமாரம்மன் கோவிலிலும் சுனையிலும் பூஜை நடந்தது. பின்னர் 27 நட்சத்திர செடிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பெண்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் சின்னத்திரை இயங்குனர் மற்றும் நடிகர் திருமுருகன், தயாரிப்பாளர், நடிகர் பாரதிகண்ணன் கலந்து கொண்டு பேசினார்கள். தோரணமலை முருகன் அருளால் தடைபட்ட நின்ற சின்னத்திரை தொழில் சிறப்பாக தொடர்ந்தது என்றனா். பின்னர் அவர்கள் மலையேறி பத்திரகாளி அம்மன், முருகனை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாணவி சுபாஷினியின் பரதநாட்டியம் மற்றும் ஒரு சிறுவனின் கருப்பசாமி நடனம் அனைவரையும் கவர்ந்தது. கடையம் வேல்முருகன் குழுவினரின் சிலம்பாட்டம், கராத்தே சாகசனம் நிகழ்ந்து. இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இன்றைய தினம் காலை முதல் மலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

oplus_131074

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *