தென்காசி கோவிலில் உடமைகள் பாதுகாக்கும் அறைக்கு அடிக்கல் நாட்டுவிழா
1 min read
Foundation stone laying ceremony for a room to store belongings at Tenkasi Temple
7.8.2025
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் உடைமைகள் பாதுகாக்கும் அறைக்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.
தென்காசியில் பிரசித்திப்பெற்ற அருள் மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை கட்டும் பணியை தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலகி ருஷ்ணன், செயல் கோயில் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி சட் டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத் தார்.
இந்நிகழ்ச்சியில் தென் காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஊத்து மலை ஜமீன்தார் முரளி ராஜா, தென்காசி மாவட்ட ஊராட்சி
துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், முன்னாள் செங் கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சீவ நல்லூர் ப.சட்டநாதன், மாவட்ட தென்காசி ஊராட்சிமன்றங்கள் கூட் டமைப்பின் தலைவர்
கோவிந்தப்பேரி டி .கே.பாண் டியன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜார்ஜ், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தாயார்தோப்பு ராமர், மாவட்ட மகளிர் அணி தலைவி பூமாதேவி, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் கதிரவன், மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாநில பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி, தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், தகவல் தொழில்நுட் பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச் செயலாளர் ராஜீவ் காந்தி, தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங் கிரஸ் பொதுச் செயலா ளர் பிரேம்குமார், தென் காசி நகர துணைத் தியாகராஜன், சித்திக், நகர்மன்ற உறுப்பினர் சுப் பிரமணியன், காங்கிரஸ் நிர்வாகி அசன் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.