June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

India Alliance MPs protest in Parliament complex

19.8.2025
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார். இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்களை டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மீண்டும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கையில் பேனர்களை ஏந்தியபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *